Friday, March 30, 2012

G.O Ms.No.47
March 2, 2012 பள்ளிக் கல்வித் துறை - சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms.No.40
February 21, 2012 பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலமாக நடத்தப்படும் பாரதியார் தினம் / குடியரசு தினம் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு இணையம் (The School Games Federation of India) நடத்தும் தெரிவுப் போட்டிகளில் தமிழ்நாடு மாநில கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பள்ளிகளை மட்டுமே பங்குகொள்ள அனுமதித்தல் ஆணை வெளியிடப்பட்டது - மைய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்கள் பங்கேற்க அனுமதி வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பாணையினை செயல்படுத்துதல் - திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms.No.36
February 17, 2012 பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏப்ரல் 2012 மற்றும் ஏப்ரல் 2013ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரு பருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms.No.15
January 23, 2012 பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms. No. 11
January 18, 2012 பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms. No. 12
January 18, 2012 பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms.No. 5
January 9, 2012 பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் மாதிரிப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளிப்பது- ஆணை வெளியிடப்படுகிறது.



G.O Ms.No.2
January 7, 2012 பள்ளிக் கல்வி - இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் / மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகளை வகுத்து ஆணையிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறத