Wednesday, May 11, 2011

புதுதில்லி, மே 11- மத்திய குடிமைப் பணிகளுக்கான
 யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ். திவ்யதர்ஷினி 
முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.


ஊழலுக்கு எதிராக போராடுவதே தனது குறிக்கோள்
 என்று அவர் கூறியுள்ளார்.





சென்னையைச் சேர்ந்த இவர் சட்டப்படிப்பு பட்டதாரி
என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்
 இவர் பி.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர்.


மேலும், தமிழகத்தைச் சேர்ந்த
ஆர்.வி. வருண்குமார் 3வது இடமும்,
 எம். அரவிந்த் 8-வது இடமும், 
ஆர். ராகப்பிரியா 28வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


மீர் முகமது 59-வது இடமும்,
 எஸ். கார்த்திகேயன் 118வது இடத்தையும்,
 பி.சீனிவாசன் 134-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


இந்த ஆண்டு 203 பெண்கள் உட்பட 920 குடிமைப் பணித் தேர்தவில்
 வெற்றி பெற்றுள்ளனர்.



  • TNGOTNGO.BLOGSPOT.COM         CONGRADULATES THEM